| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 352 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 4 | மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப் பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே–4-3-4 | மா வலி தன்னுடைய,Maa Vali Thannudaiya - மஹாபலியினுடைய மகன் வாணன்,Mahan Vaanan - புத்திரனாகிய பாணாஸுரனுடைய மகள் இருந்த,Magal Irundha - மகளான உஷை இருந்து காவலை,Kaavalai - சிறைக் கூடத்தை கட்டு அழித்த,Kattu Azhitha - அரனோடே அழித்தருளினவனும் தனி காளை,Thani Kaalai - ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான் கருதும் மலை,Karudhum Malai - விரும்புகிற மலையாவது; கோவலர்,Kovalar - இடையர்களுக்கும் கோவிந்தனை,Govindhanai - கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக குற மாதர்கள்,Kura Maathargal - குறத்திகளானவர்கள் குறிஞ்சி மலர்,Kurinji Malar - குறிஞ்சி ராகத்தோடு கூடின பா,Paa - பாட்டுக்களை ஒலி பாடி,Oli Paadi - இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான) நடம் பயில்,Nadam Payil - கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே |