| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 353 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 5 | பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங் காரன் மலை குலமலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-5 | பலபல நாழம்,Palapala Naazham - பலபல குற்றங்களை சொல்லி,Solli - சொல்லி பழித்த,Pazhitha - தூஷித்த சிசு பாலன் தன்னை,Sisu Balan Thannai - சிசுபாலனுடைய அலவலைமை,Alavalaimai - அற்பத் தனத்தை தவிர்த்த,Thavirtha - (சாம தசையில்) போக்கி யருளின அழகன்,Azhagan - அழகை யுடையவனும் அலங்காரன்,Alangaaran - அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி மலை,Malai - மலையானது: குலம் மலை,Kulam Malai - தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும் கோலம் மலை,Kolam Malai - அழகை யுடைய மலையும் குளிர் மா மலை,Kulir Maa Malai - குளிர்ந்த பெரிய மலைகள் கொற்றம் மலை,Kotram Malai - ஜயத்தை யுடைய மலையும் நிலம் மலை,Nilam Malai - (நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய நீண்ட மலை,Neenda Malai - நீட்சியை யுடைய மலையுமான திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |