Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 354 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
354ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 6
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக
தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6
பாண்டவர் தம்முடைய,Paandavar Thammudaiya - பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி,Paanchaali - த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்,Marukkam Ellam - மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு,Aandu - (தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு,Angu - (அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்,Nootruvar Tham - (துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்,Pendir Mel - மனைவியர்களின் மேல்
வைத்த,Vaitha - சுமத்தின
அப்பன்,Appan - ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையானது :
பாண் தரு,Paan Tharu - பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டு திரளானவை
பண்கள்,Pangal - ராகங்களை
பாடி,Paadi - பாடிக் கொண்டு
மது,Madu - தேனை
பருக,Paruga - குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்,Thondal - ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே,Thollai Maaliruncholai Adhe - அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.