Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 357 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
357ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 9
கோட்டு மண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து
மீட்டு மதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று
ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே–4-3-9
மண்,Mann - (ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை
இடந்து,Edandhu - (வராஹர மாய் அவதரித்து) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு லிடுவித்தெடுத்து
கோடு,Kodu - (தனது) திரு வயிற்றிலே
கொண்டு,Kondu - என்று கொண்டும்,
மண்,Mann - (மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை
குடங் கையில்,Kudang Kaiyil - (வாமந ரூபியாய் அவதரித்து) அகங்கையில்
கொண்டு,Kondu - (நீரேற்று) வாங்கிக் கொண்டு
அளந்து,Alandhu - அளந்தருளியும்
மீட்டும்,Meettum - மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.)
அது,Adhu - அப் பூமியை
உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து,Umizhndhu - (பிம்பு பிரளங் கழித்தவாறே) (அதனை) வெளிப் படுத்தியும்
விளையாடும்,Vilaiyaadum - (இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே) விளையாடா நின்றுள்ள
விமலன்,Vimalan - நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையாவது;
ஈட்டிய,Eettiya - (பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற
பல் பொருள்கள்,Pal Porulgal - பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்
எம் பிரானுக்கு,Em Piraanukku - எம் பெருமானுக்கு
அடியுரை என்று,Adiyurai Endru - ஸ்ரீபாத காணிக்கை யென்று
ஒட்டரும்,Ottarum - (பெருகி) ஒடி வாரா நின்றுள்ள
தண்,Than - குளிர்ந்த
சிலம்பாறு உடை,Silambaaru Udai - நூபுர கங்கையை யுடைய
மாலிருஞ் சோலை அதே,Maaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே