| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 358 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 10 | ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும் ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10 | ஆயிரம்,Aayiram - பலவாயிருந்துள்ள தோள்,Thol - திருத் தோள்களை பரப்பு,Parappu - பரப்பிக் கொண்டும். முடி ஆயிரம்,Mudi Aayiram - ஆயிரந் திருமுடிகளும் மின் இசை,Min Isai - (திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும் பை,Pai - பரந்த ஆயிரம் தலைய,Aayiram Thalaiya - ஆயிரந்தலைகளை யுடைய அனந்தன்,Ananthan - திருவந்தாழ்வான் மீது சயனன்,Sayanan - பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான் ஆளும்,Aalum - ஆளுகின்ற மலை,Malai - மலையாவது, ஆயிரம் ஆறுகளும்,Aayiram Aarugalum - பல நதிகளையும் பல ஆயிரம் சுனைகளும்,Pala Aayiram Sunaigalum - அனேகமாயிரந் தடாகங்களையும் ஆயிரம் பொழிலும் உடை,Aayiram Pozhilum Udai - பல பூஞ்சோலைகளையுமுடைய |