Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 359 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
359ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 11
மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11
மாலிருஞ்சோலை என்னும்,Maaliruncholai Ennum - திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை,Malaiyai - திருமலையை
உடைய,Udaiya - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை,Malaiyai - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
கால் இரு மூர்த்தி தன்னை,Kaal Iru Moorththi Thannai - திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும்
நால் வேதம் கடல் அமுதை,Naal Vedham Kadal Amudhai - நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும்
மேல் இருங் கற்பகத்தை,Mel Irung Karppagaththai - (ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும்
வேதாந்தம்,Vedhaantham - வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற
விழுப்பொருளில்,Vizhupporulil - சிறந்த அர்த்தங்களுள்
மேல் இருந்த,Mel Irundha - மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும்
விளக்கை,Vilakkai - தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்
விரித்தன,Viriththana - அருளிச் செய்தவை இப் பாசுரங்கள்.