| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 360 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 1 | நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந் தோம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர் மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப் பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ–4-4-1 | நாவ காரியம்,Naava Kaariyam - நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை சொல்லில்லாதவர்,Sollillaadhavar - (ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள் நாள் தோறும்,Naal Thorum - நாடோறும் விருந்து ஓம்புவார்,Virundhu Ombuvaar - (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும் தேவர் காரியம் செய்து,Thevar Kaariyam Seidhu - பகவதாராதநம் பண்ணிக் கொண்டும் வேதம்,Vedham - வேதங்களை பயின்று,Payindru - ஓதிக் கொண்டும் வாழ்,Vaal - வாழுமிடாமன திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,) மூவர்,Moovar - பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய காரியமும்,Kaariyamum - காரியங்களையும் திருத்தும், Thiruththum - செய்து தலைக் கட்டுமவனும். முதல்வனை,Mudhalvanai - (எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை சிந்தியாத,Sindhiyaadha - நெஞ்சாலும் நினையாத அ பாவ காரிகளை,A Paava Kaariigalai - அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை படைத்தவன்,Padaiththavan - ஸ்ருஷ்டித்தவன் எங்ஙனம்,Engnganam - எதுக்காக படைத்தான் கொல் ஓ,Padaiththaan Kol O - ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்) |