Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 361 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
361ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 2
குற்ற மின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனு கூலராய்
செற்ற மொன்று மிலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி யேழுல குண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந் தார்களே-4-4-2
குற்றம் இன்றி,Kutram Inri - ஒரு வகையான குற்றமுமில்லாமல்
குணம்,Gunam - (சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி,Perukki - வளரச் செய்து கொண்டு
குருக்களுக்கு,Gurugukkalukku - (தம் தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்,Anukoolar Aay - (கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத,Setram Ondrum Ilaadha - பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்,Van Kaiyinaargal - கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vazh - வாழுமிடமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
ஏழ் உலகு,Ezhu Ulagu - ஸப்த லோகங்களையும்
துற்றி,Thuttri - ஒரு கபளமாகத் திரட்டி
உண்ட,Unda - அமுது செய்தருளினவனும்
தூ,Thoo - பழிப்பற்ற
மணி வண்ணந்தன்னை,Mani - நீல மணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்,Thozhaadhavar - வணங்காதவர்
பெற்ற ,Petra - (தங்களைப்) பெற்ற
தாயர்,Thaayar - தாய்மாருமடய
வயிற்றினை,Vayittrinai - வயிற்றை
பெரு நோய் செய்வான்,Peru Noi Seivaan - மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக
பிறந்தார்கள்,Pirandhaargal - பிறந்தார்