திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3611 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3611திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (இப்பதிகத்திற்கு பாசுரம் நெஞ்சிலே பட்டால், ஆரேனுமாகிலும் உருகியே நிற்பர்கள் என்கிறார். பலனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரத்தில் ஒரு பலன் சொல்லதே இங்ஙனே சொல்லலாமோ வென்னில் இதுவும் பயனுரைத்த படியேயாம்; ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாயிருப்பவர்களையும் உருகச் செய்வது ஒரு பலனன்றோ.) 11
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத் தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத் தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11
பதவுரை Show / Hide
இன்பம் தலைப் பெய்து,Inbam thalaip peydhu - பேரின்பத்தை விளைவித்துக் கொண்டு
எங்கும் தழைத்த,Engum thazhaitha - எங்கும் மவியாபித் திருக்கின்ற
தன் புகழ்,Than pugazh - எம்பெருமான்றனது கீர்த்திகளை
பல் ஊழிக்கு ஏத்த,Pal oozhikku aetha - ஊழிதோறூழியோவாமல் அதிக்கும்படியாக
தனக்கு அருள் செய்த,Thanakku arul seitha - தமக்கு பரம கிருமை பண்ணின
மாயனை,Maayanai - ஆச்சரிய குணசீலனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர் சடகோபன் சொல்,Then kurukoor sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே
இவை ஒன்பதோடு ஒன்றுக்கு,Ivai onbadhodu onrukku - இப்பதிகத்திற்கு
மூ உலகும் உருகும்,Moo ulagam urugum - மூவுலகத்தவரும் உருகுவர்கள்