| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 362 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 3 | வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும் திண்ணை சூழ் திருக் கோட்டியூர்த் திரு மாலவன் திரு நாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகிலாது போய் உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்து கின்றார்களே–4-4-3 | நல் வண்ணம்,Nal Vannam - நல்ல நிறத்தை யுடைய மணியும்,Maniyum - ரத்நங்களையும் மரகதமும்,Maragathamum - மரகதகங்களையும் அழுத்தி,Azhuthi - (ஒழுங்கு பட) இழைத்ததனால் நிழல் எழும்,Nizhal Ezhum - ஒளி விடா நின்றுள்ள திண்ணை,Thinnai - திண்ணைகளாலே சூழ்,Sool - சூழப் பெற்ற திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற) திருமால் அவன்,Thirumaal Avan - திருமாமகன் கொழுநனுடைய திரு நாமங்கள்,Thiru Naamangal - திரு நாமங்களை எண்ண,Enna - (ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா கண்ட,Kanda - படைக்கப் பட்ட விரல்களால்,Viralgalal - விரல்களாலே (அந்தத் திருநாமங்களை) இறை பொழுதும்,Irai Pozhuthum - க்ஷண காலமும் எண்ண இலாது,Enna Ilaadhu - எண்ண மாட்டாமல் போய்,Poi - புறம்பே சென்று உண்ணக் கண்ட,Unnak Kanda - (சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற தம்,Tham - தங்களுடைய நம் ஊத்தை வாய்க்கு,Nam Ooththai Vaikku - அசுத்தமான வாயிலே கவளம்,Kavalam - சோற்றுத் திரள்களை உந்துகின்றார்களே,Undhugindraargale - (அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே! (இதென்ன கொடுமை.!) |