| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3631 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.) 9 | பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9 | நீர் ஏந்து இள குருகே,Neer endhu ila kuruke - நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும் பொள் ஆழி கையாருக்கு,Pol azhi kaiyaarukku - அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும் திருமூழிக்களத் தாருக்கு,Thirumoozhikkalath thaarukku - திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு பூண் ஏந்து முலை பயந்து,Poon endhu mulai payandhu - ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து என் இணை மலர் நீர்ததும்ப,En inai malar neerdathumba - மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி தாம் தம்மை கொண்டு அகல்தல்,Thaam thammai kondu agalthal - அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது நகவு அன்று என்று உரையீர்,Nakavu anru endru uraiyeer - தருமமன்று என்று சொல்லுங்கோள் |