திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3634 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –பகவத் தர்சன அபேக்ஷராய் இருப்பாருடைய துக்கங்களை போக்கும் திரு நாவாயை நமக்கும் ஒரு நாள் குறுகுகைக்கு உபாயம் உண்டோ என்கிறார்) 1 | அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1 | பதவுரை Show / Hideஅவனை,Avanai - பரமபோக்யனான ஸர்வேச்வானானவனை ஆகத்து,Aagathu - தங்கள் உள்ளத்திலே சிறுத்தும் மனத்து ஒன்றிய,Siruththum manaththu onriya - நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணுமென்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய சிந்தையினார்க்கு,Sinthaiyinaarkku - மநோரதத்தையுடைய பக்தர்களுக்கு வினை ஆயின அறுக்கும்,Vinai aayina arukkum - அநுபவ விரோதிகளையெல்லாம் போக்கக் கடலதாய் வெறி தண் மலர்,Veri than malar - ஈறு மணம்மிக்குக் குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்டதான திருநாவாய்,Thirunaavaai - திருநாவாயென்னும் திருப்பதியானது கொடியேற்கு,Kodiyerku - கொடியேனான வெனக்கு குறுக்கும் வகை உண்டு கொல் ஓ,Kurukkum vagai undu kol o - கிட்டும் வகையுண்டோ? |