திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3635 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3635திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார்.) 2
கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன் வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2
பதவுரை Show / Hide
கொடி ஏர் இடை,Kodi eer idai - கொடிபோலாகிய இடையையுடையனாய்
கோகனகத்தவன்,Koganakaththavan - தாமரையாளான பிராட்டிக்கு
கேள்வன்,Kelvan - வல்லபனாய்
வடிவேல் தட கண் மட பின்னை மணாளன்,Vadivel thada kan mada pinnai manaalan - உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய்
நெடியான்,Nediyan - மஹா புருஷனானவன்
உறை,Urai - நித்யவாஸம்பண்ணுகிற
சோலைகள் சூழ் திருநாவாய்,Solaigal soozh Thirunaavaai - சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை
அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல்,Adiyean anuga perum naal evai kol - அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ