திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3636 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார்.) 3 | எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3 | பதவுரை Show / Hideஅணுக பெறுநாள் எவை கொள்ல என்று,Anuga perunaal evai kol enru - கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று எப்போதும்,Eppothum - எக்காலத்திலும் சுவையில் மனம் இன்றி,Suvaiyil manam inri - இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு கண் நீர்கள் கலுழ்வன்,Kan neergal kaluzhvan - கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன் நவை இல் திரு நாரணன் சேர்,Navai il Thiru Naranan ser - ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற திருநாவாய் அவையுள்,Thirunaavaai avaiyul - திருநாவாய்ப்பதியில் திருவோலக்கத்திலே புகல் ஆவது ஓர் நாள் அறியேன்,Pugal aavathu or naal ariyen - சென்று சேர்வதற்கீடான வொரு நானை அறிகின்றிலேன். |