திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3638 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3638திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார்.) 5
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5
பதவுரை Show / Hide
மலர்மங்கைக்கும்,Malarmangaikkum - பெரிய பிராட்டியாருக்கும்
மண் மடந்தைக்கும்,Man madandaikkum - பூமிப் பிராட்டிக்கும்
மணாளன்,Manaalan - மணயாளனாய்
உலகத்து உயிர் தேவர் கட்கு எல்லாம் கண்ணாளன்,Ulakaththu uyir thevar kadku ellaam kannaalaan - மண்ணுலகத்ததவர்க்கும் விண்ணுலகத்தவர்க்கு மெல்லாம் நிர்வாஹகனாய்
வீண் ஆளன்,Veen aalan - பரமபதத்திலுள்ளாவைரயும் அடிமை கொள்ளுபவனான ஸர்வேச்வரன்
விரும்பி உறையும் திருநாமாய்,Virumbi uraiyum Thirunaamaai - ஆதாரத்தோடு வர்த்திக்கிற திரு நாவாயை
கண்ண ஆர கண்டு,Kanna aara kandu - கண்கள் வயிறு நிறையும்படி கண்டு
இங்கு களிக்கிறது என்று கொல்,Ingu kalikkirathu enru kol - இங்கே ஆனந்திப்பது என்றைக்கோ?