| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 364 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 5 | ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய் தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர் நேமி சேர் தடங் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்க ளுண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே–4-4-5 | இள,Ila - இளமை பொருந்திய வாளைகள்,Vaalagal - ‘வாளை’ என்னும் மீன்கள் ஆமையின்,Aamaiyin - ஆமைகளினுடைய முதுகத்திடை,Mudugaththidai - முதுகின் மேல் குதி கொண்டு,Kudhi Kondu - குதித்துக் கொண்டும் தூ மலர்,Thoo Malar - நல்ல புஷ்பங்களை சாடிப் போய்,Saadi Poi - உழக்கிக் கொண்டும் தீமை செய்து,Theemai Seidhu - (க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும் விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான நீர்,Neer - நீரை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்) நேமி,Nemi - திருவாழி யாழ்வானோடு சேர்,Ser - சேர்ந்திருக்கிற தட,Thada - பெரிய கையினானை,Kaiyinaanai - திருக் கையை யுடையனுமான எம்பெருமானை நினைப்பு இலா,Ninaippu Ilaa - (ஒரு காலும்) நினையாத வலி நெஞ்சு உடை,Vali Nenju Udai - கடினமான நெஞ்சை உடையவர்களும் பூமி பாரங்கள்,Bhoomi Paarangal - பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள் உண்ணும்,Unnum - உண்கிற சோற்றினை,Sotrinai - சோற்றை வாங்கி,Vaangi - பிடுங்கி விட்டு, (எறிந்து) புல்லை,Pullai - (அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு திணிமின்,Thinimin - (அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள். |