திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3641 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3641திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (கீழ்ப்பாட்டில் “ஆவாவடியானிவனென்றருளாயே” என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார்.) 8
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8
பதவுரை Show / Hide
அருளாது ஒழிவாய்,Arulaathu ozhivaai - என்பால் அருள் செய்யாதிருக்கிலுமிரு
அடியேனை,Adiyenai - அடியேன் பக்கலில்
அருள் செய்த,Arul seydha - க்ருபைபண்ணி
பொருள் ஆக்கி,Porul aakki - ஒரு உஸ்துவாக்கி
உன்பொன் அடி கீழ் புகவைப்பாள்,Unpon adi keezh pugavaippaalo - உன் திருவடிகளின் கிழே வைத்துக் கொண்டாலும் கொள்.
தென் திருநாவாய் என் தேவே,Then Thirunaavaai en devey - அழகிய திருநாவாயில் வர்த்திக்கிற எம்பெருமானே
மருளே இன்றி,Marule inri - ஒரு காலும் அஜ்ஞான கந்தமில்லாதபடி
உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளேதரு,Unnai en nenjaththu iruththum theruledharu - உன்னை என்னுடைய நெஞ்சிலேயிருத்தியநுபவிக்கும்படியான தெளிந்த அறிவைத் தந்தருள வேணும்