திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3642 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (தாம் இப்படிச் சொல்லச் செய்தேயும் ஒரு விசேஷ கடாக்ஷம் செய்தருளாமையாலே ‘நான் இவ்வாசையோடே முடியா நின்றென். என்னுடைய அபிமதத்தைப் பெற்றுக்களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ?’ என்கிறார்.) 9 | தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9 | பதவுரை Show / Hideதேவர் முனிவர்க்கு,Devar munivarkku - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் என்றும் காண்டற்கு அரியன்,Endrum kaandarku ariyan - (ஸ்வப்ரயத்நத்தினால்) எப்போதும் காணமுடியாதவனாய் மூவர் முதல்வன்,Moovar mudhalvan - பிரமன் சிவனிந்திரக்கும் ஸத்தோஹேது பூதனாய் ஒரு மூவுலகு ஆளி,Oru moovulagu aali - மூவுலகங்களையும் நீர்யஹிக்கு மாவனான தேவன்,Devan - எம்பெருமான் விரும்பி உறையும்,Virumbi uraiyum - ஆதரத்தோடு வர்த்திக்குமிடமான திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியை இனி,Eni - நான் முடிந்தேனானா பின்பு துர்தோ,Thurdho - ஐயோ! |