| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 366 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 7 | குருந்த மொன்றொசித் தானொடும் சென்று கூடி யாடி விழாச் செய்து திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர் கருந்தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் இருந்த வூரிலிருக்கும் மானிடர் எத் தவங்கள் செய்தார் கொலோ–4-4-7 | திருந்து,Thirundhu - (எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய நால் மறையோர்,Naal Maraiyor - நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்று குருத்தம்,Ondru Kuruththam - ஒரு குருத்த மரத்தை ஒசித்தானோடும்,Osiththaanoodum - முறித்தருளின கண்ண பிரானை சென்று கூடி,Senru Koodi - சென்று சேர்ந்து ஆடி,Aadi - (அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து விழாச் செய்து,Vizha Seithu - (விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு இரா பகல்,Eraa Pagal - இரவும் பகலும் ஏந்தி,Eaendhi - மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு வாழ்,Vaazh - வாழுமிடமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,) கருந்தட,Karundhata - கறுத்துப் பெருத்த முகில்,Mugil - மேகம் போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து கடைக் கொண்டு,Kadai Kondu - நைச்சியாநுஸந்தானத்துடன் கை தொழும்,Kai Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள பக்தர்கள்,Bakthargal - பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் இருந்த,Erundha - எழுந்தருளி யிருக்குமிடமான ஊரில்,Ooril - ஊரிலே இருக்கும்,Erukkum - நித்ய வாஸம் பண்ணுகிற மானிடர்,Maanidar - மநுஷ்யர்கள் ஏதலங்கள்,Eaethalangal - எப்படிப்பட்ட பாவங்களை செய்தார் கொல் ஓ,Seithaar Kol O - அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.) |