| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 367 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 8 | நளிர்ந்த சீலன் நயாசல னபிமான துங்கனை நாடொறும் தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள் விளைந்த்த தானியமு மிராக்கர் மீது கொள்ள கிலார்களே–4-4-8 | நளிர்ந்த சீலன்,Nalirndha Seelan - குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும் நயாசலன்,Nayaasalan - நீதிநெறி தவறாதவரும் அபிமான துங்கனை,Abimaana Thunganai - இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும் நாள் தொறும் தெளிந்த செல்வனை,Naal Thorum Thelintha Selvanai - நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை சேவகம் கொண்ட,Sevagam Konda - அடிமை கொண்டவனாய் செம் கண் மால்,Sem Kan Maal - செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய் திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் குளிர்ந்து உறைகின்ற,Kulirndhu Uraiginra - திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய கோவிந்தன் குணம் படுவார்,Govindan Gunam Paduvaar - கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்,Ulla Naattinul Vilaindha Thaniyamum - எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும் இராக்கதர்,Raakkathar - ராக்ஷஸர்கள் மீது கொள்ள கிலார்கள்,Meedhu Kolla Kilaargal - அபஹரிக்க மாட்டார்கள் |