| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 369 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 10 | காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே–4-4-10 | காசின் வாய்,Kaasin Vaai - ஒருகாசுக்கு கரம்,Karam - ஒரு பிடி நெல் விற்கிலும்,Virkilum - விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும் சோறு இட்டு,Sooru Ittu - (அதிதிகளுக்கு) அன்னமளித்து தேச வார்த்தை,Desa Vaarthai - புகழ்ச்சியான வார்த்தைகளை படைக்கும்,Padaikkum - ஸம்பாதித்துக் கொள்ளுமவரும் வண் மங்கையினார்கள்,Van Mangaiyinaargal - உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்,Vaazh - வாழுமிடமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற) கேசவா,Kesavaa - கேசவனே! புருடோத்தமா,Purudhooththamaa - புருஷோத்தமனே! காவாது,Kaavaadhu - (தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது மாறு இலி,Maatru Ili - பதில் உபகாரத்தை எதிர் பாராமல் கிளர் சோதியாய்,Kilar Sothiyaai - மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே! குறளா,Kuralaa - வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே! என்று,Endru - என்றிப்படி பேசுவார்,Pesuvaar - (எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான அடியார்கள்,Adiyaargal - பாகவதர்கள் எந்தம்மை,Endhammmai - அடியோங்களை விற்கவும் பெறுவார்கள்,Virkavum Peruvaargal - (தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள். |