| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 370 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 11 | சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும் கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11 | சீதம் நீர்,Seetham Neer - குளிர்ந்த நீராலே படை சூழ்,Padai Soozh - சுற்றும் சூழப் பெற்ற செழு,Sezhu - செழுமை தங்கிய கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற) ஆதியான்,Aadhiyaan - எம்பெருமானுக்கு அடியாரையும்,Adiyaaraiyum - அடிமை செய்யும் பாகவதர்களையும் அடிமை இன்றி,Adimai Inri - அடிமை செய்யாமல் திரிவாரையும்,Thirivaaraiyum - திரிகின்ற பாவிகளையும் குறித்து, கோதில்,Kothil - குற்றமற்றவரும் பட்டர் பிரான்,Pattar Piraan - அந்தணர்கட்குத் தலைவரும் குளிர,Kulira - குளிர்ந்த புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மண்,Man - நிர்வாஹருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இப் பாசுரங்களை ஏதும் இன்றி,Eaathum Inri - பழுதில்லாதபடி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் இருடீகேசனுக்கு,Irudheekesanukku - எம்பெருமானுக்கு ஆளர்,Aalar - ஆட் செய்யப் பெறுவர் |