| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 372 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சீயினால் செறிந்தேறிய புண் மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும் ஈயினால் அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே–4-5-2 | சீயினால்,Seeyinaal - சீயாலே செறிந்து எறிய,Serindhu Eriya - மிகவும் நிறைந்த புண் மேல்,Punn Mel - புண்ணின் மேல் செற்றல் ஏறி,Setral Eaari - ஈ இருந்து முட்டை யிட்டு குழம்பிருந்து,Kuzhambirundhu - அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில் எங்கும்,Engum - உடல் முழுதும் ஈயினால்,Eeyinaal - ஈயாலே அரிப்புண்டு,Aripputru - அரிக்கப்பட்டு மயங்கி,Mayangi - (வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்,Ellai Vaai Senru Servadhan Munnam - சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே வாயினால்,Vaaiyinaal - வாயாலே நமோ நாராணா என்று,Namo Naaraanaa Endru - ‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு மத்தகத்திடை,Maththagaththidai - உச்சியிலே கைகளைக் கூப்பி,Kaigalai Kooppi - அஞ்ஜலி பண்ணி போயினால்,Poyinaal - (சரீர வியோகமான பின்பு) (பரம பதம்) போய்ச் சேர்ந்தால் பின்னை,Pinnai - பிறகு பிணைக் கொடுக்கிலும்,Pinaik Kodukkilum - (நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றும்,Endrum - ஒருகாலும் போக ஒட்டார்,Poga Ottaar - (இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள் |