திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 373 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
373பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3
சோர்வினால் பொருள் வைத்த துண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வினாவிலும் வாய் திறவாதே அந்தக் காலம் அடைவதன் முன்னம் மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-3
பதவுரை Show / Hide
சோர்வினால்,Soruvenaal - களவு வழியாலே
பொருள் வைத்தது,Porul Vaiththathu - (எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில்
சொல்லு சொல் என்று,Sollu Sol Endru - (அதைச்) செல்லு, சொல்லு என்று
சுற்றும் இருந்து,Sutrum Irundhu - சூழ்ந்து கொண்டு
ஆர்வினாவிலும்,Aarvinaavilum - எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும்
வாய் திறவாதே,Vaai Thiravaadhe - (அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி.
அந்தக் காலம்,Andhak Kaalam - மரண காலமானது
அடைவதன் மூலம்,Adaivadhan Moolam - வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது,Maarvam Enbadhu - ‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில்,Or Koyil - ஒரு ஸந்நிதியை
அமைத்து,Amaiththu - ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)
மாதவன் என்னும்,Madhavan Ennum - ‘திருமால்’ என்கிற
தெய்வத்தை,Dheivaththai - தேவதையை
நாட்டி,Naatti - எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து)
ஆர்வம்மென்பது,Aarvammenbadhu - பக்தி என்கிற
ஓர் பூ,Or Poo - ஒரு புஷ்பத்தை
இட வல்லார்க்கு,Eda Vallaarkku - ஸமர்பிக்க வல்லவர்களுக்கு
அரவதண்டத்தின்,Aravathandaththin - யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும்
உய்யலும் ஆம்,Uyyalum Aam - தப்பிப் பிழைக்கலாகும்.