Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 374 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
374ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4
மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி
காலுங் கையும் விதிர் விதிர்த் தேறிக் கண்ணுறக்க மாவதன்
முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை
உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே–4-5-4
மேல் எழுந்தது ஓர் வாயு,Mel Ezhundhathu Or Vaayu - ஊர்த்துவச்ஸமானது
கிளர்ந்து,Kilarndhu - மேலெழுந்ததனால்
மேல் மிடறு,Mel Midaru - நெஞ்சானது
உள் எழ வாங்கி,Ul Eza Vaangi - கீழே இடிந்து விழப் பெற்று
காலும் கையும்,Kaalum Kaiyum - கால்களும் கைகளும்
விதிர் விதிர்த்து ஏறி,Vidhir Vidhirththu Eaari - பதைபதைக்கப் பெற்று
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே,
மூலமாகிய ஒற்றை எழுத்தை,Moolamaagiya Otrai Ezhuththai - (ஸகலவேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை
மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி,Moonru Maaththiraigal Ul Eza Vaangi - உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து
வேலை வண்ணனை,Velai Vannanai - கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை
மேவுதிர் ஆகில்,Mevuthir Aagil - ஆச்ரயித்தீர்களாகில்
விண் அகத்தினில்,Vin Agaththinil - ஸ்ரீவைகுண்டத்தில்
மேவலும் ஆம்,Mevalum Aam - அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம்.