| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 375 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | மடிவழி வந்து நீர் புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே கடைவழி வாரக் கண்டமடைப்பக் கண்ணுறக்க மாவதன் முன்னம் தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசனென் றேத்த வல்லீரே–4-5-5 | மடி புலன் வழி வந்து,Madi Pulan Vali Vandhu - லிங்கத்தின் வழியாக வந்து நீர் சோர,Neer Sora - மூத்திர நீர் பெருகவும் வாயில்,Vaayil - வாயிலே அட்டிய,Attiya - பெய்த கஞ்சியும்,Kanjiyum - பொரிக் கஞ்சியும் கண்டம் அடைப்ப,Kandam Adaippa - கழுத்தை அடைக்கவும் மீண்டும்,Meendum - மறுபடியும் கடை வழி,Kadai Vali - கடை வாய் வழியாலே வார,Vaara - (அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும் கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - கண் உறக்கம் அது ஆவதன் முன்னம் இருடீகேசன் என்று,Erudeekesan Endru - (ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி) ஏத்த வல்லீர்,Eaitha Vallir - ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே! நாய்கள்,Naaygal - (யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை உம்பை,Umbai - உங்களை கவரா,Kavaraa - கவர மாட்டா; உம்மை,Ummai - (யம கிங்கரர்களும் ) உங்களை சூலத்தால்,Soolaththaal - சூலாயுதத்தால் பாய்வதும் செய்யார்,Paayvadhuum Seiyaar - கத்தவும் மாட்டார்கள்; நீர்,Neer - நீங்கள் இடை வழியில்,Edai Valiyil - நடு வழியில் கூறையும்,Kooraikum - வஸ்திரத்தையும் இழவீர்,Izhavir - இழக்க மாட்டீர்கள் |