திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 376 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
376பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டுலவும் கடற் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்கு என்றும் சாதிக்க லாமே–4-5-6
பதவுரை Show / Hide
அவை ஐந்தும்,Avai Aindhum - பஞ்ச பிராணன்களும்
அங்கம் விட்டு,Angam Vittu - உடலை விட்டு
அகற்றி,Agarthi - அகன்று போக
மூக்கினில்,Mookkinil - மூக்கில் (கையை வைத்து)
ஆவி சோதித்த பின்னை,Aavi Sodhiththa Pinnai - ‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு
சங்கம் விட்டு,Sangam Vittu - (அவருடைய உயிரில்) ஆசையை விட்டு,
கையை மறித்து,Kaiyai Mariththu - (அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை ஏன்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக) கையை விரித்துக் காட்டி
பைய,Paiya - மெள்ள மெள்ள
தலை சாய்ப்பதன் முன்னம்,Thalai Saayppadhan Munnam - (தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே,
வங்கம்,Vangam - கப்பல்களானவை
விட்டு உலவும்,Vittu Ulavum - இடை விடாமல் திரியப் பெற்ற
கடல்,Kadal - கடலில்
பள்ளி,Palli - பள்ளி கொள்பவனும்
மாயனை,Maayanai - ஆச்சரிய சக்தி யுத்தனும்
மது சூதனை,Madhu Soothanai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை
மார்பில்,Maarbil - ஹ்ருதயத்தில்
தங்க விட்டு வைத்து,Thanga Vittu Vaiththu - அமைத்து,
ஆவது ஓர் கருமம்,Aavadhu Or Karumam - ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை)
சாதிப்பார்க்கு,Saadhippaarkku - ஸாதிக்குமவர்களுக்கு
என்றும்,Endrum - எந்நாளும்
சாதிக்கலாம்,Saadhikkalaam - பலாநுபவம் பண்ணப் பெறலாம்.