திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 377 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
377பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7
தென்னவன் தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித் தெற்றிப் பின் முன் னாக இழுப்பதன் முன்னம் இன்னவன் இனையானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி மன்னவன் மது சூதன னென்பார் வானகத்து மன்றாடிகள் தாமே–4-5-7
பதவுரை Show / Hide
செப்பம் இலாதார்,Seppam Ilaadhaar - ருஜுவான செய்கை இல்லாதவர்களான
தென்னவன்,Thennavan - தமர் யம கிங்கரர்கள்
சே அதக்குவார் போல,Se Athakkuvaar Pola - எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல
புகுந்து,Pugundhu - வந்து,
பின்னும்,Pinnum - அதற்கு மேல்
வல் கயிற்றால்,Val Kayittraal - வலிவுள்ள பாசங்களினால்
பிணித்து,Piniththu - கட்டி
ஏற்றி,Eaathri - அடித்து
பின் முன் ஆக,Pin Mun Aaga - தலை கீழாக
இழுப்பதன் முன்னம்,Ezhuppadhan Munnam - (யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே
மன்னவன்,Mannavan - (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான்
இன்னவன் இனையாள் என்று சொல்லி,Innavan Inaiyaal Endru Solli - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று
எண்ணி,Enni - (அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி) (அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி
உள்ளத்து இருள் அற,Ullaththu Irul Ara - ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி
நோக்கி,Nookki - (எம் பெருமானை) ஸாஷாத்கரித்து,
மதுசூதனன் என்பார்,Madhusoodanan Enbaar - (தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள்
வான் அகத்து,Vaan Agaththu - ஸ்ரீவைகுண்டத்திலே
மன்றாடிகள் தாம்,Mantraadigal Thaam - (எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள்