| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 378 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து பாடிப் பாடி ஓர் பாடையிலிட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்துவமுடைக் கோவிந்தனோடு கூடி யாடிய உள்ளத்தரானால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே–4-5-8 | உற்றார்கள்,Urrargal - (மரணமான பின்பு) பந்துக்களானவர்கள் கூடி கூடி இருந்து,Koodi Koodi Irundhu - திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு குற்றம் நிற்க,Kutram Nirka - (செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு) நற்றங்கள்,Natrangal - (சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை பறைந்து,Parainthu - சொல்லி, பாடிப் பாடி,Paadip Paadi - (அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி ஓர் பாடையில் இட்டு,Or Paadaiyil Ittu - ஒரு பாடையிலே படுக்க வைத்து கோடி மூடி,Koodi Moodi - வஸ்திரத்தை யிட்டு மூடி நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல,Narip Padaikku Oru Paagudam Pola - நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,) எடுப்பதன் முன்னம்,Eduppadhan Munnam - (சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே, கௌத்துவம்,Kauthuvam - கௌஸ்துபத்தை உடை,Udai - (திரு மார்பிலே) உடைய கோவிந்தனோடு,Govindhanodu - எம்பெருமன் பக்கலில் கூடி ஆடிய,Koodi Aadiya - சேர்ந்து அவகாஹித்த உள்ளத்தர் ஆனால்,Ullaththar Aanaal - நெஞ்சை யுடையவர்களாக ஆனால், குறிப்பு இடம்,Kurippu Idam - யம லோகத்தை கடந்து,Kadandhu - (அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து) உய்யலும் ஆம்,Uyyalum Aam - உஜ்ஜீவிக்கப் பெறலாம். |