திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 379 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
379பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9
வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-9
பதவுரை Show / Hide
வாய்,Vaai - வாயானது
ஒரு பக்கம் வாங்கி வலிப்ப,Oru Pakkam Vaangi Valippa - (வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும்
வார்ந்த நீர்,Vaarndha Neer - பெருகா நின்ற நீரை யுடையதும்
குழி,Kuzhi - உள்ளே இடிய இழிந்ததுமான
கண்கள்,Kangal - கண்ணானது
மிழற்ற,Mizhatra - அலமந்து நிற்கவும்,
ஒரு பக்கம்,Oru Pakkam - ஒரு பக்கத்தில்
தந்தை,Thandhai - தகப்பானரும்
தாரமும்,Thaaramum - மனைவியும் (இருந்து கொண்டு)
அலற்ற,Alatra - கதறி அழவும்
ஒரு பக்கம்,Oru Pakkam - மற்றொரு பக்கத்திலே
தீ,Thee - நெருப்பானது
சேர்வதன் முன்னம்,Servadhan Munnam - (மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே
செம் கண் மாலொடும்,Sem Kan Maalodum - புண்டரீகரக்ஷனான எம்பெருமானை
சிக்கன சுற்றம் ஆய்,Sikkana Suttram Aai - நிருபாதிக பந்துவாகக் கொண்டு
ஒரு பக்கம்,Oru Pakkam - அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய்
நிற்க வல்லாருக்கு,Nirka Vallaarkku - நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு
அரவ தண்டத்தில்,Arava Thandaththil - யம தண்டனையில் நின்றும்
உய்யலும் ஆம்,Uyyalum Aam - தப்பிப் பிழைக்கப் பெறலாம்.