| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 38 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 16 | விண் கொளமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16 | விண் கொள்,Vin kol - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட அமரர்கள்,Amararagal - தேவதைகளுடைய வேதனை தீர,Vedhanai theera - துன்பங்கள் தீரும்படி முன்,Mun - முன்னே மண்கொள்,Man kol - பூமியை இருப்பிடமாகக் கொண்ட வசுதேவர் தம்,Vasudevar tham - வஸுதேவர்க்கு மகனாய் வந்து,Maganaai vandhu - பிள்ளையாய் வந்து பிறந்து திண்கொள்,Thin kol - வலிமைகொண்ட அசுரர்,Asurar - அஸுரர்கள் தேய,Theya - க்ஷயிக்கும்படி வளர்கின்றான்,Valar kindraan - வளராநின்ற கண்ணனுடைய கண்கள் இருந்த ஆ வந்து காணீரே,Kangal irundha aa vandhu kaaneere - கண்கள் இருந்த ஆ காணீர்! கனம் வளையீர் வந்து காணீரே,Kanam valaiyeer vandhu kaaneere - கநக கங்கணத்தை யுடைய பெண்காள் வந்து காணீர்!! |