Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 380 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
380ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல்
பத்தரா யிறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன்
சித்தம் நன்கொருங்கித் திரு மாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே–4-5-10
செத்துப் போவது ஓர் போது,Seththu Povadhu Or Podhu - இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள்,Seykaigal - (கடுஞ்) செயல்களை
நினைத்து,Ninaiththu - நினைத்து
தேவ பிரான் மேல்,Deva Piraan Mel - தேவ பிரான் பக்கலில்
பத்தர் ஆய்,Pattar Aai - அன்பு பூண்டவர்களாய் இருந்து
இறந்தார்,Irandhaar - (பின்பு) இறந்தவர்கள்
பெறும் பேற்றை,Perum Paettrai - அடையக்கூடிய பலன்களைக் குறித்து,
பாழி தோள்,Paazhi Thol - (ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும்
புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்,Kon - தலைவருமான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
செய்யும்,Seyyum - (யம படர்களால்) செய்யப் படுகிற
சித்தம்,Siththam - (தம்முடைய) நெஞ்சை
திருமாலை,Thirumaalai - திருமால் திறத்தில்
நன்கு,Nangu - நன்றாக
ஒருங்கி,Orungi - ஒருபடுத்தி
செய்த,Seydha - அருளிச் செய்த
மாலை,Maalai - சொல் மாலையாகிய
இவை பத்தும்,Ivai Paththum - இப் பத்துப் பாட்டுகளையும்
வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள்,
சித்தம் நன்கு ஒருங்கி,Siththam Nangu Orungi - (ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப்படப் பெற்று
திருமால் மேல்,Thirumaal Mel - திருமால் பக்கலிலே
சென்ற,Senra - குடி கொண்ட
சிந்தை,Sindhai - மநஸ்ஸை
பெறுவர்,Peruvar - உடையராவர்.