திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 381 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
381பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 1
காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள் கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள். –4-6-1
பதவுரை Show / Hide
காசுக்கு,Kaasukku - ஒரு காசுக்காகவும்
கறை உடை,Karai Udai - (தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய
கூறைக்கும்,Kooraiykkum - வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும்,Or Katraikkum - ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
ஆசையினால்,Aasaiyinaal - ஆசையாலே
பேர்,Per - (க்ஷத்ர பிள்ளைகளுக்கு) இடுகிற
ஆதர்காள்,Aadhargaal - அறிவு கெட்டவர்களே!
நீங்கள்,Neengal - நீங்கள்
கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும்
நாயகன்,Naayagan - ஸர்வ சேஷியுமான
நாரணன்,Naaranan - நாராணனுடைய
பேர்,Per - திரு நாமங்களை
இட்டு,Ettu - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
தேனித்து இருமின்,Theniththu Irumin - மகிழ்ச்சி கொண்டிருங்கள்
தம் மன்னை,Tham Mannai - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார்
நரகம் புகார்,Narakam Pugaar - துர்க் கதியை அடைய மாட்டார்கள்.