திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 382 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
382பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 2
அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால் மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2
பதவுரை Show / Hide
அங்கு,Angu - அந்த நீசரிடத்தில்
ஒரு கூறை,Oru Koorai - ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு உடுப்பதன் ஆசையால்,Araikku Uduppadhan Aasaiyaal - அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய,Mangiya - கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும்,Maanida Saadhi Per Idum - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள்,Aadhargaal - குருடர்களே!
நங்கைகாள்,Nangaikaal - சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே!
செம் கண் நெடு மால்,Sem Kan Nedu Maal - புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!
சிரீதரா,Sreedharaa - (நீங்கள் உங்கள் பிள்ளையை) ஸ்ரீதரனே!
அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தீர்களாகில்
நாரணன்,Naaranan - நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை,Thammannai - தாயானவள்
நரகம் புகாள்,Narakam Pugaal - நரகம் புகார்