திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 383 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
383பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 3
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர் பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3
பதவுரை Show / Hide
எச்சம் பொழிந்தீர்காள்,Echcham Pozhindheergaal - ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில்,Uchchiyil - உச்சியில் (தடவத் தக்க)
எண்ணெயும்,Ennaiyum - எண்ணெயும்
சுட்டியும்,Sutthiyum - (நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும்,Valaiyum - (கையில் அணியத் தக்க) வளையையும்
உகந்து,Ugandhu - விரும்பி
என் செய்வான் ,En Seivaan - ஏதுக்காக
பிறர்,Pirar - (எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய
பேர்,Per - பெயர்களை
இட்டீர்,Ettir - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?
பிச்சை புக்க ஆகிலும்,Pitchai Pukka Aagilum - பிச்சையெடுத்து ஜீவித்தாலும்
எம்பிரான் திருநாமமே,Empiraan Thirunaamame - எம்பெருமானுடைய திரு நாமத்தையே
நச்சுமின்,Nachchumin - விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)
நாரணன்,Naaranan - இத்யாதி பூர்வவத்