| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 385 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 5 | மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5 | மலம் உடை,Malam Udai - மலத்தை யுடையதும் ஊத்தையில்,Ooththaiyil - ஹேயமுமான சரீரத்தில் நின்றும் தோன்றிற்று ஓர்,Thonritru Or - தோன்றினதொரு மலம் ஊத்தையை,Malam Ooththaiyai - (தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை மலம் உடை,Malam Udai - (கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும் பேர்,Per - (ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய) பெயரை இட்டால்,Ettaal - இட்டு அழைத்தால் இல்லை,Ellai - ஒருவழியு மில்லையாம்: குலம் உடை,Kulam Udai - நற்குலத்திற் பிறந்த கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்,Govindhaa Govindhaa Endru Alaiththak Kaal - கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால். நலம் உடை,Nalam Udai - (தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய நாரணன்,Naaranan - எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |