| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 386 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 6 | நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6 | நாடும்,Naadum - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும் அறிய,Ariya - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி, மானிடர் பேர் இட்டு,Maanidar Per Ittu - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு கூடி,Koodi - அவர்களோடு கூடி அழுங்கி,Azhungi - ஒளி மழுங்கி குழியில் வீழ்ந்து,Kuzhiyil Veezhndhu - (அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து வழுக்காதே,Vazhukkaadhe - தவறிப் போகாமல், சாடு,Saadu - ‘சகடாஸுரன் இற,Era - முறியும்படி பாய்ந்த,Paayndha - உதைத்தருளின தலைவா,Thalaivaa - பெரியோனே!’ (என்றும்) தாமோதரா என்று,Thaamodharaa Endru - ‘தாமோதரனே! என்றும் நாடுமின்,Naadumin - வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்; நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Naagam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |