திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 387 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
387பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 7
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7
பதவுரை Show / Hide
கண்ணில் பிறந்து,Kannil Pirandhu - கண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்,Man Aagum - பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்,Maanidar - அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு,Per Ittu - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு,Angu - ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்,Ennam Ondru Inri Irukkum - ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மணிசர்காள்,Ezhai Manisargaal - அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு,Kannukku - கண்ணால் காண்கைக்கு
இனிய,Iniya - யோக்யனாயும்
கரு முகில்,Karu Mugil - காள மேகம் போன்ற
கண்ணன்,Kannan - நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே,Naamame - திரு நாமத்தையே
கண்ணுமின் நாரணன்,Kannumin Naaranan - விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaan - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.