திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 388 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
388பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 8
நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால் நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8
பதவுரை Show / Hide
நம்பி பிம்பி என்று,Nambi Pimbi Endru - நம்பி என்றும் பிம்பி என்றும்
நாட்டு மானிடப் பேரிட்டால்,Naattu Maanidap Per Ittaal - க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை (உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்
நம்பும் பின்பும் எல்லாம்,Nambum Pinbum Ellaam - ‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம்
நாலு நாளில்,Naalu Naalil - நாலு நாளைக்குள்
அழுங்கிப்போம் ,Azhungippom - அழிந்துபோம்;
செம் பெருந் தாமரை,Sem Perun Thaamarai - சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற
கண்ணன்,Kannan - திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு,Per Ittu - திரு நாமத்தை இட்டு
அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தால்
நம்பிகாள்,Nambikaal - (அறிவினால்) குறைவற்றவர்களே!
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.