திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3885 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3885உபதேச ரத்னமாலை || தமக்குக் கிடைத்த உபதேச வழியின் படியே வெண்பாவில் அமைத்துப் பேசுவதாகக் கூறுதல் 1
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து
பதவுரை Show / Hide
எமக்கு ஆசிரியரான ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை என்கிற ஸ்ரீ திருமலை யாழ்வார் உடைய பரம கிருபையினால் கிடைத்த உபதேச வழியை
அனுசந்தித்து பின்பு உள்ளாறும் கற்குமாறு பொருத்தமான சீர்களை யுடைய வெண்பா வென்கிற யாப்பிலே அமைத்து
உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உபதேச ரூபமாகப் பேசுகின்றேன் —
மன்னிய சீர் -வெண்பாவுக்கு விசேஷணம் ஆக்காமல்
மன்னிய சீர்களைப் பேசுகின்றேன் -ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஆச்சார்யர்களின் திருக் குணங்களைப் பேசுகின்றேன் என்னவுமாம்