திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3886 | உபதேச ரத்னமாலை || இப்பிரபந்தத்தை விவேகிகள் உகப்பதே போதும் என்கிறார் 2 | கற்றார்கள் தாமுகப்பர் கல்வி தன்னுள் ஆசையுள்ளோர்
பெற்றோம் என யுகந்து பின்பு கற்றார் -மற்றோர்கள்
மாச்சர்யத்தால் இகழில் வந்தது என்னெஞ்சே யிகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு | பதவுரை Show / Hideமனமே கல்வி பயின்றவர்கள் இப் பிரபந்தத்தைப் பெற்று மகிழ்ந்திடுவர்கள் -கல்வியில் விருப்பம் உள்ளவர்கள் இது லபிக்கப் பெற்றோமே என்று அகம் குழைந்து பிறகு இதை அப்யசிப்பர்கள் -கீழ்ச் சொன்ன இரண்டு வகுப்பிலும் சேராத மற்றையோர்கள் மாத்சர்யத்தினால் பகை பாராட்டி இதனை இகழ்ந்தால் அதனால் நமக்கு உண்டாகும் சேதம் என்ன -ஒன்றும் இல்லை -அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல விஷயங்களை இகழ்வது எனபது வியப்போ -அவர்கட்கு இது இயல்பே யன்றோ ஆச்சரியமோ தானவர்க்கு -என்று பிரித்து ஆஸூர பிரக்ருதிகளுக்கு -என்றும் சொல்வர் -ஆயினும் இப்பொருள் விவஷிதம் அல்ல என்பர் |