திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3887 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3887உபதேச ரத்னமாலை || ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்த்திகளுக்கு பல்லாண்டு – 3
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -ஏழ்பாரும் உய்ய வர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
பதவுரை Show / Hide
ஸ்ரீ பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார்கள் வாழ்ந்திடுக -அவர்கள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் வாழ்ந்திடுக
தாழ்வு ஒன்றும் இல்லாத மிகச் சிறந்த ஸ்ரீ எம்பெருமானார் முதலான ஆசார்யர்கள் வாழ்க
பூ மண்டலம் முழுவதும் உஜ்ஜீவிக்குமாறு அவ்வாசிரியர்கள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளும் விலஷணமான வேதங்களோடு கூட வாழ்க
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து -என்றது வேதங்களும் வாழ வேணும் என்று அவற்றுக்குமாக மங்களா சாசனம் செய்த படி
ஆழ்வார் ஆச்சார்யர்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எல்லாம் வேதமே மூலமானது பற்றி அவற்றுக்கும் மங்களா சாசனம் ப்ராப்தம்
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து அவர்கள் உரைத்தவர்கள் -என்று அந்வயித்து-
வேதங்களுக்குச் சேர ஆசாரியர்கள் அருளிச் செய்தவை -என்ற பொருளும் உரைப்பர் –