திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3888 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3888உபதேச ரத்னமாலை || ஆழ்வார்களின் திரு அவதார க்ரமம் அருளுகிறார்- 4
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன்–துய்ய பட்ட நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு
பதவுரை Show / Hide
பொய்கையாழ்வார் முதல்வர் -பூதத் தாழ்வார் இரண்டாமவர் -பேயாழ்வார் மூன்றாமவர் -கீர்த்தி வாய்ந்த திரு மலிசைப் பிரான் நான்காமவர் –
அருள் மிக்க நம்மாழ்வார் ஐந்தாமவர் -குலசேகரப் பெருமாள் ஆறாமவர் -பரி சுத்தரான பெரியாழ்வார் ஏழாமவர்-தொண்டர் அடிப்பொடி யாழ்வார் எட்டாமவர் –
பரம சாத்விகரான திருப் பாண் ஆழ்வார் ஒன்பதாமவர் -விலஷணரான திருமங்கை யாழ்வார் பத்தாமவர்
இந்த வரிசைக் க்ராமமானது இவ் உலகில் இவ் வாழ்வார்களின் அவதார க்ரமமாகும்
சிலர் ஆராய்ச்சி செய்வதாகப் புகுந்து மனம் போனவாறாக கல்பிப்பர் -அதனால் ஆஸ்திகர்களின் நெஞ்சு
கலங்காமைக்காகப் பொய்யில்லாத மணவாள மா முனிகள் இங்கனே அடைவு தன்னை அமைத்து அருளுகிறார்