| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 389 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 9 | ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9 | ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்,Ooththai Kuzhiyil Amudham Paayvadhu Pol - அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே உங்கள் மூத்திரப் பிள்ளையை,Ungal Mooththirapp Pillaiyai - உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு என் முகில் வண்ணன் பேர் இட்டு,En Mugil Vannan Per Ittu - எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான (எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி) கோத்து குழைத்து,Koththu Kuzhaiththu - (அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று) (அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து குணாலம் ஆடி,Kunaalam Aadi - (அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக) குணாலைக் கூத்தாடிக் கொண்டு திரிமின்,Thirimin - திரியுங்கள் நாத்தகு நாரணன்,Naaththaku Naaranan - (இப்படியாகில்) நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |