திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3893 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3893உபதேச ரத்னமாலை || மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற திருவவதரித்த பெருமையை அருளிச் செய்கிறார் 9
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார் வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து
பதவுரை Show / Hide
வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகள்
சீஷா வியாகரணம் நிருக்தம் சந்தஸ் கல்பம் ஜ்யோதிஷம் -ஆறு வேத அங்கங்கள்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்திரங்கள் -ஆகிற எட்டு உப அங்கங்கள்
நம்மாழ்வார் திரு உள்ளத்தைப் பின் பற்றியே மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்து உள்ளார்கள் என்றபடி