திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3894 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3894உபதேச ரத்னமாலை || திருப்பாண் ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 10
கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் இன்று காசினியீர் வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின் நன்குடனே கொண்டாடும் நாள்
பதவுரை Show / Hide
அறிய வேண்டும் அர்த்தங்களை எல்லாம் அழகாக அமைத்து பத்தே பாசுரமாகச் சுருங்க அருளிச் செய்தவர் இவ் வாழ்வார் யாதலால்
அமலனாதி பிரான் கற்றதன் பின் -என்று சிறப்பித்து எடுத்து அருளுகிறார்
நன்குடனே கொண்டாடும் நாள் -நலமாக கொண்டாடப் பெரும் நாளாகும் இது