| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 390 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 10 | சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர் பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10 | சீர்,Seer - கல்யாண குணங்களை அணி,Ani - ஆபரணமாக வுடையவனும் மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய திரு நாமமே,Thiru Naamame - திருநாமத்தையே இட,Ida - (தம் பிள்ளைகளுக்கு இடும்படி) தேற்றிய,Theatriya - உபதேசித்தருளினவரும் வீரம் அணி,Veeram Ani - (இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும் தொல் புகழ்,Thol Pugazh - சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரித்த,Viriththa - விரிவாக அருளிச் செய்தமையும் ஓர் அணி,Or Ani - (கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும் ஒண் தமிழ்,On Tamil - அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள ஒன்பதோடு ஒன்றும்,Onbadhodu Ondrum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர் பேர் அணி,Per Ani - பெரியதும் அழகியதுமான வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்தில் என்றும்,Endrum - எந்நாளும் பேரணி இருப்பர்,Perani Iruppar - (எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர். |