திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3903 | உபதேச ரத்னமாலை || திருப்பல்லாண்டின் முதன்மைக்கு காரணம் அருளிச் செய்கிறார் – 19 | கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் -வேதத்துக்கு
ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால் | பதவுரை Show / Hideகோதில வாம் -அசாரம் என்று கழிக்கத் தக்க அம்சங்கள் ஒன்றும் இன்றிக்கே முழுவதும் சாரமே யான -என்றபடி – வேதங்களுக்கு பிரணவம் முதன்மையானது போலே திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் திருப்பல்லாண்டு முதன்மை யாயிற்று – பிரணவமானது சகல வேதார்த்த சார நிதியாகவும் மங்கலச் சொல்லாகவும் இருக்கும் அது போலவே திருப் பல்லாண்டும் சகல திவ்ய பிரபந்த சாரார்த்த நிதியாகவும் மங்கள மயமாகவும் இருக்கும் – சர்வாதிகாரமான இப் பிரபந்தத்தில் ஓம் என்று பிரயோகிததனால் பிரணவம் சர்வாதிகாரம் என்று மாமுனிகள் திரு உள்ளம் என்று உணரத் தகும் |