திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3905 | உபதேச ரத்னமாலை || ஆண்டாள் மதுரகவிகள் உடையவர் இம் மூவருடைய திருவவதார நாள்களை அருளிச் செய்ய சங்கல்பித்து அருளுகிறார் 21 | ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் மதுரகவி
வாழ்வார் எதிராசராம் இவர்கள் -வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் | பதவுரை Show / Hideவாழ்வாக -லோக உஜ்ஜீவன அர்த்தமாக – ஆழ்வார் திருமகளார் -ஆழ்வார்கள் எல்லார்க்கும் திருமகள் -என்னவுமாம் -கீழ் அருளிச் செய்த பெரியாழ்வார் திருமகளார் -என்னவுமாம் பொய்கையாழ்வார் போல்வார் எம்பெருமானது திருக் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்ததனால் ஆழ்வார்கள் என்று பெயர் பெற்றால் போலே நம்மாழ்வார் உடைய குணக்கடலில் ஆழ்ந்ததனால் மதுரகவி ஆழ்வார் ஆனார் – திவ்ய பிரபந்தங்கள் சேர்த்தியில் உள்ளமையால் மதுர கவி ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் திரு நாள் பாட்டு அருளிச் செய்கிறார் எம்பெருமானார் தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றபடி அருளிச் செயல்களை வளர்த்த தாய் ஆதலாலும் அவர் விஷயமான நூற்றந்தாதிப் பிரபந்தம் திருவவதரித்தலளாலும் அவர்க்கும் திருநாள் பாட்டி இட்டு அருளுகிறார் திருவரங்கத்தமுதனார் பிரபந்தம் பணித்தவராய் இருந்தாலும் அவர்க்கு அர்ச்சைத் திருக் கோலம் அமைந்து இலதாதளால் நாள் பாட்டு சேவிக்க பராசக்தி இல்லை என்று விடப்பட்டது – |