திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3906 | உபதேச ரத்னமாலை || ஆண்டாள் உடைய திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 22 | இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் -குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய் | பதவுரை Show / Hideகுன்றாத வாழ்வான -நித்ய ஸ்ரீ யான எம்பெருமான் இந்நிலத்திலே திருவவதரித்து கீதோ உபநிஷத்தை தன முகத்தாலே வெளியிட்டு அருளி உபகரித்தான் அது வடமொழியையும் ககனமாயும் இருப்பதனால் அனைவர்க்கும் ஒருங்கே பயன்படவில்லை இக்குறை தீரப் பெரிய பிராட்டியார் தாமே வந்து திருவவதரித்து வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் -என்று புகழ்த் தக்கதான திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழ் நடையில் உபகரித்து அஸ்மாதாதிகளை உய்வித்தால் எனபது இங்கு உணரத் தக்கது – |